Friday, October 26, 2012

Boys r Girls


ஜானு - உனக்கு பிடிக்கலன்னா எதுக்கு ஆர்டர் பண்ணே..?
கார்த்திக் - உனக்கு பிடிக்குமே...

ஜானு - செய்றதெல்லாம் செஞ்சுட்டு இப்டி தியாகம் பண்ணுற மாதிரி நடிக்காத...
கார்த்திக் - பிடிக்காதது Pizza மட்டும் இல்ல..

ஜானு - வேற என்ன பிடிக்கல
கார்த்திக் - எத்துணையோ பிடிக்கல

ஜானு - பொதுவா பேசாத.. என்கிட்ட உனக்கு என்ன பிடிக்கல
கார்த்திக் - வேண்டாம் தேவ இல்லாம சண்ட வரும்

ஜானு - சொல்லாம போனா தான் சண்ட வரும்.. அதான் உதடு வரைக்கும் வண்துருசுள்ளே சொல்லு..
கார்த்திக் - உன் கோவம் பிடிக்கல, உன் புடிவாதமும் பிடிக்கல.. எந்த பொன்னையும் சும்மா பாக்க கூடாதுன்னு சொல்ற பாரு அந்த கண்டிஷன் பிடிக்கல..
எல்லாத்தையும் விட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட சண்ட போடுற பாதிய.. அது சுத்தமா பிடிக்கல.. இப்டி உன்கிட்ட பிடிக்காதது 100 இருக்கு..

ஜானு - எனக்கு உன்கிட்ட பிடிக்காதது 1000 இருக்கு..
கார்த்திக் - நான் 100 னு சொன்னதும் நீ 1000 னு சொல்ற பாரு அது தான் பொண்ணுகளோட குணம்.

ஜானு - ஒரு வார்த்த கூட பேச விடாம வாய அடிக்குற பாரு அது தான் ஆம்பளைங்க குணம்
கார்த்திக் - ஹிஹிஹி.. எந்த பொண்ணுகளும் ஆம்பளைங்கள நம்புறதே கிடையாது... கடவுளுக்கே இதே நிலைமை தான்..

ஜானு - பொய் சொல்லுறது ஆம்பளைங்களுக்கு பிறவி குணம்.. இதுல கடவுள் ஒன்னும் விதிவிலக்கில்ல.. All men are Idiots .
கார்த்திக் - நிஜம்.. அறிவாளிகளா இருந்து இருந்தா எப்டி அவங்க பொண்ணுகள Love பண்ணுவாங்க..

ஜானு - உன் mind ல perversion இருக்கு. எங்க ewa கெடைப்பா னு அலையுற.
கார்த்திக் - நீங்க ஒரு ஆம்பளைய பார்த்தா அதுக்கு பெயர் "Just Looking", அதுவே நாங்க பார்த்தா அதுக்கு பெயர் அலையுறோமா?? பொம்பளைங்க நியாயம் எப்பவுமே One Side தான்.

ஜானு - எதுக்கு உன் கூட வீண் பேச்சு.. உனக்கு யார பிடிச்சு இருக்கோ அவங்க கூட போய் சுத்து.. என்ன விட்டுடு

No comments:

Post a Comment